வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவி : அதிமுக வழங்கல்
வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்கப்பட்டது.;
வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அதிமுக வழங்கியது.
சென்னை வேளச்சேரியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராம்நகர், டான்சி நகர், ஆகிய பகுதிகள் முழுவதுமாக வெள்ள நீர் சூழ்ந்ததால். குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதியுற்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வேளச்சேரியை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான எம்.ஏ.மூர்த்தி தலைமையில், தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என்.ரவி, மற்றும் கழக அமைப்பு செயலாளர் வா.மைத்ரேயன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, ஹாட்பாக்ஸ், கோதுமை மாவு, பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
வேளச்சேரி அதிமுக பிரமுகர் எம்.ஏ.மூர்த்தி சூர்யா அறக்கட்டளை கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஏராளமான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, தினந்தோறும் ஏழை எளியோருக்கு உணவு வழங்குவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை செய்வது, பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.. இதுமட்டுமில்லாமல் மனிதனின் இறுதி நிகழ்வான இறப்பின் போதும் சவப்பெட்டி வழங்கியும் சொர்க்க ரதத்தை இலவசமாகவும் வழங்கி பேருதவி செய்து வருகிறது.