நமக்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் : நீதிபதி ராமசுப்பிரமணியன்

காத்திருக்காமல் குறுக்கு வழியில் சென்று வேலையை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ள வரையில் நாட்டில் ஊழல் அழியாது என்றார்;

Update: 2022-03-05 15:00 GMT

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் தேசிய வரிவிதிப்பு மையப் போட்டியின் வெற்றியாளர்களின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன்

காத்திருக்காமல் குறுக்கு வழியில் சென்று வேலையை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ள வரையில் நாட்டில் ஊழல் அழியாது, நமக்கான நேரம் வரும் வரையில் நாம் காத்திருக்க வேண்டும் - உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் தேசிய வரிவிதிப்பு மையப் போட்டியின் வெற்றியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. வரிவிதிப்பு சட்டத் துறையில் சாதனை புரிந்து மறைந்த கே ஆர் ரமாமணி நினைவாக வரிவிதிப்பு விசாரணை குறித்து வாதாடும் போட்டியானது ஆண்டு தோறும் இந்திய அளவில் நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் இப்போட்டியில் இந்தியாவில் உள்ள சட்டப் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

நிகழாண்டில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேசிய வரிவிதிப்பு மையப் போட்டியின் வெற்றியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கோப்பைகளை வழங்கி  வாழ்த்துகளையும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது : தேவைக்காக வரிசையில் நிற்கும் போது காத்திருக்காமல் குறுக்கு வழியில் சென்று வேலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ள வரையில் நாட்டில் ஊழல் அழியாது என்றும், நமக்கான நேரம் வரும் வரையில் நாம் காத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். 

Tags:    

Similar News