கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு? உண்மை என்ன?

சென்னை வேளச்சேரி அருகே கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது.;

Update: 2023-08-21 11:24 GMT

சென்னையில் பிரபல கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி - வேளச்சேரி சாலையில் அமைந்துள்ளது தனியார் கல்லூரி ஒன்று. இங்கு சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் வந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவ்வப்போது கல்லூரி மாணவர்களுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் நடப்பதும் பின் அவை சமாதானமாக போவதும் நடக்கும் நிகழ்வுதான்.

ஆனால் இன்று இரு வேறு தரப்பு மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இருவேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குள் இருக்கும் மோதல் இன்று வெடித்து சிதறியிருக்கிறது. இதில் ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது.

பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது (நாட்டு வெடிகுண்டு என்று கூறப்படுகிறது), அருகாமையிலுள்ள பல இடங்களுக்கும் கேட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள், நிர்வாகம் மட்டுமின்றி அருகாமையிலிருக்கும் பொதுமக்களும் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கின்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. மேலும் காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மாணவர்கள், அங்கு பணிபுரிபவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் நாட்டு வெடிகுண்டு இல்லை தீபாவளி குண்டு என்று சிலர் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் இதுகுறித்து இன்னும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். 

Tags:    

Similar News