வேளச்சேரியில் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றாத மாநகராட்சி நிர்வாகம்

வேளச்சேரியில் சாலையில் முறிந்து விழுந்த மரம் புகார் அளித்தும் அகற்றாமல் மாநகராட்சி அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் புகார்;

Update: 2022-09-09 05:00 GMT

 வேளச்சேரி அடுத்த டான்சி நகர் 10வது தெருவில் ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. 

வேளச்சேரியில் சாலையில் முறிந்து விழுந்த மரம் புகார் அளித்தும் அகற்றாமல் மாநகராட்சி அலட்சியம்.

சென்னை வேளச்சேரி அடுத்த டான்சி நகர் 10வது தெருவில் ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அவ்வழியே சாலையில் செல்லுவோர் செல்ல முடியாமல் திரும்பி செல்கின்றனர். சிலர் நடந்து மரத்திற்குள் நுழைந்து செல்கின்றனர் எதிர்பாராத விதமாக மரம் அவர்கள் மேல் விழுந்தால் நிலைமை என்னவாகும்.

நேற்று முன் தினம் இரவு விழுந்த மரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்தும் தற்போது வரை அகற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றன.உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மரத்தை விரைந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

Tags:    

Similar News