சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணற்சிற்பம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணற்சிற்பம்

Update: 2022-04-08 05:29 GMT

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணல்சிற்பம்.

சென்னையை சேர்ந்த 10 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து கடற்கரைக்கு வரும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் செய்தனர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் வரைந்த மணல் சிற்பம் எல்த் இஸ் வெல்த் என்ற தலைப்பில் வேல்ஸ் பல்கலைக்கழக காட்சி தொடர்பியியல் துறை பேராசிரியர் காளிமுத்து தலைமையிலான அணியினர் அன்னை தெரெசா உருவத்தை வரைந்துள்ளனர்.

அதேபோல் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையு வலியுறுத்தும் வகையில் தடுப்பூசியை சிற்பமாக செதுக்கியுள்ளனர்.

கல்லூரியின் காட்சி தொடர்பியியல் துறை தலைவர் ஸ்ரீ ஜோதி தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் காட்சி தொடற்பியல் துறை (அனிமேஷன்) தலைவர் கலைசெல்வன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News