வேளச்சேரியில் சாலை விபத்து: இளம் பெண் உயிரிழப்பு

வேளச்சேரியில் தனியார் பஸ் ஓட்டுனரின் கவனக்குறைவால் நடந்த சாலை விபத்தில் இளம் பெண் உயிரிழந்தார்.;

Update: 2021-11-23 03:30 GMT

வேளச்சேரி சாலை விபத்து

வேளச்சேரியில் சாலையை கடக்க முயன்ற பெண்ணை தனியார் பேருந்து வளைவின் போது ஏற்றியதில் பேருந்துகடியில் சிக்கி உயிரிழப்பு.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை, குருநானக் கல்லூரி சந்திப்பில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற வேளச்சேரியை சேர்ந்த சங்கீதா(37), என்ற பெண்ணை 100 அடி சாலையில் தனியார் பேருந்து ஒன்று யூ டர்ன் செய்த போது கவனிக்காமல் ஏற்றி இறக்கியதில் பேருந்துக்கடியிலேயே சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த புஷ்பராஜை கைது செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News