கழிவு நீர் கசிந்து தெருக்களில் ஓடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம்
பேருந்து பணிமனையின் கழிவு நீர் கசிந்து தெருக்களில் ஓடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம், என்.ஜி.ஓ.காலனியில் பேருந்து பணிமனை அமைந்துள்ளது. பேருந்து பணிமனையின் கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் கசிந்து பணிமனையின் பின்புறம் தெருக்களில் வழிந்தோடுகிறது.
என்.ஜி.ஓ.காலனி முதல் பிரதான சாலையில் தெருக்களில் கழிவுநீர் ஓடுவதால் அவ்வழியே நடந்து செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குடியிருப்பின் வாயில் பகுதிகளில் தேங்கி நிற்பதால் ஏராளமான கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து பணிமனை மேலாளர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு என அப்பகுதி மக்கள் ஓர் ஆண்டு காலமாக புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.