சென்னை குருநானக் கல்லூரியில் பவித் சிங் நாயர் நினைவு கோப்பை கிரிக்கெட்

சென்னை குருநானக் கல்லூரியில் பவித் சிங் நாயர் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.;

Update: 2022-04-22 06:53 GMT

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பவித் சிங் நாயர் நினைவாக அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான டி-20 கிரிக்கெட் போட்டி 8வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆடவர், மகளிர்களுக்கென போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு என ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் சென்னை முழுவதிலும் இருந்து 10 அணிகளும் கலந்து கொண்டு மோதின.

இதில் மகளிர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் குருநானக் கல்லூரியும், ஜஸ்டிஸ் பசீர் அகமது கல்லூரியும் மோதியதில் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. பசீர் அகமது கல்லூரி 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 75 ரன்கள் வித்தியாசத்தில் குருநானக் கல்லூரி வெற்றி பெற்று 23ம் தேதி நடக்கும் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மேலும் மாலை அரையிறுதி போட்டியில் எத்திராஜ் கல்லூரியும், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியும் மோதி வருகின்றன இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இன்று ஆடவர்களுக்கான அரையிறுதி போட்டி நடைபெறும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்படும், தொடர் நாயகர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட உள்ளது. 

Tags:    

Similar News