அதிகமா சம்பளம் வாங்கிய கூலித் தொழிலாளி: மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை

வேளச்சேரியில் அதிகமா சம்பளம் வாங்கிய கூலித் தொழிலாளியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-09-26 09:15 GMT

அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை வேளச்சேரியில் நேற்று மாலை புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்து ஆனந்தன்(22), என்பவர் தவறி கீழே விழுந்ததாக மருத்துவமனையில் இருந்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தவர்களின், நண்பர்களிடம் கேட்ட போது குடிபோதையில் கீழே விழுந்து இறந்ததாக தெரிவித்தனர்.

போலீசாருக்கு இவர்கள் கூறியதில் சந்தேகம் ஏற்பட சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் மூவரும் பதட்டமில்லாமல் பொறுமையாக கீழே வந்து கீழே விழுந்தவரின் வாயில் மதுவை ஊற்றியது பதிவாகியிருந்தது.

அதன் பிறகு அதனை வைத்து சம்பவ இடத்தில் ஒன்றாக மது அருந்திய கட்டிட தொழிலாளிகளான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல்(25), சீனிவாசன்(25), பிரசாந்த்(23), ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் சீனிவாசன் தவிர்த்து மற்ற மூவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்த்தாகவும், இதில் ஆனந்தன் மட்டும் நன்றாக வேலை செய்வதால் அவருக்கு மேஸ்திரி 50 ரூபாய் கூடுதலாக கூலி கொடுத்துள்ளார். இதனால் மற்றவர்கள் ஆனந்தனிடம் நீயும் வேலையை பொறுமையாக செய்யுமாறு கூறியுள்ளனர், உன்னால் மேஸ்திரி எங்களை அவமானபடுத்துகிறார் நீ செய்யும் வேலையால் என முறையிட்டதாகவும், அதனை ஆனந்தன் கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மூவரும் சேர்ந்து சீனிவாசன் வேலை செய்யும் வேளச்சேரி கட்டிடத்தில் மது அருந்த ஆனந்தனை அழைத்து வந்துள்ளனர் பின்னர் மது அருந்திவிட்டு மாடியில் இருந்து ஆனந்தனை தள்ளிவிட்டு கொலை செய்தது வாக்குமூலம் அளித்தனர்.

மூவரையும் கைது செய்த வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News