வேளச்சேரி காவல் நிலையம் அருகே மோசமான சாலையால் அவதியுறும் வாகன ஓட்டிகள்
வேளச்சரேி காவல் நிலையம் அருகே மோசமான சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வேளச்சேரி காவல் நிலையம் அருகே பழுதடைந்த நிலையில் இருக்கும் சாலை.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில், காவல் நிலையம் எதிரில் படுமோசமான சாலையினால் அவ்வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக இந்த சாலையை மாநகராட்சியும், நெடுஞ்சாலை துறையினரும் சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதோடு மட்டுமில்லாமல், வேளச்சேரி காவல் நிலையம் முழுவதும் புழுதி தங்கும் இடமாகவும் மாறி இருக்கிறது.
மேலும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இச்சாலையை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்..