கிண்டியில் சாலையில் கத்தியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபர் கைது
இதனால் அரை மணி நேரம் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது;
கிண்டி பகுதியில் சாலையில் ரோட்டில் பட்டாக் கத்தியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சென்னை கிண்டி காவல் நிலையம் அருகே, அண்ணா சாலையில் பாலத்தின் மேல் மர்ம நபர் ஒருவர் அரை நிர்வாணமாக பட்டாக் கத்தியுடன் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தார்.இதனை கண்டு பயந்து போன வாகன ஓட்டிகள் சாலையில் கடந்து செல்ல அச்சமடைந்து நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மர்ம நபரை பிடிக்க சென்றனர், போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டினார். போலீசார் லேசான தாக்குதல் நடத்தி, பொதுமக்கள் உதவியோடு மடக்கி பிடித்தனர். இதனால் அரை மணி நேரம் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. விசாரணையில் பட்டாக்கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டியவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது பெயரைக் கூட சொல்ல தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். கத்தியை பறிமுதல் செய்த போலீசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.