சென்னை வேளச்சேரியில் மதுபான கூடத்தை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள்

சென்னை வேளச்சேரியில் மதுபான கூடத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் பற்றி வீடியோ பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-06-19 02:03 GMT

சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய தாக்குதல் காட்சி.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் டாஸ்மாக் மதுபானக்கூடம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் மதுபான கடைக்கு சென்னை தரமணி சட்டக் கல்லூரியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் சுதாகர்(23), விஷ்ணு(22), உள்ளிட்ட நான்கு பேர் மது அருந்துவதற்காக வந்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் பாரிலிருந்து அவர்கள் புறப்படும் போது பாரில் வேலை செய்யும் அஜித் என்பவர், அவர்களிடம் அதிக நேரம்  அமர்ந்திருந்ததற்காக கூடுதலாக பணம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தலைமையிலான நால்வரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணம் தர முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து சென்ற நால்வரும் தனது சக கல்லூரி மாணவர்களிடம் இது பற்றி தெரிவித்து 30க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் கையில் கத்தி, மதுபாட்டில், கற்களை எடுத்துக் கொண்டு, மதுபான பாருக்குள் புகுந்து அஜித் மற்றும் அங்கு உள்ளவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். பார் ஊழியர்களும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் பார் ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் விஷ்ணுவிற்கு காலிலும், பார் ஊழியர் அஜித்குமாருக்கு கன்னத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது

இது குறித்து பாரின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காவல்துறையினர் பார் ஊழியர்கள், மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News