காவல்துறையில் பணிபுரியும் போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்
சென்னையில் காவல்துறையில் பணிபுரியும் போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.;
சென்னையில் காவலர்களின் வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் காவல் துறையில் பணிபுரியும் போலீசாரின் வாரிசுதாரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமின் துவக்க விழா நடைபெற்றது.
இதில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு துவங்கி வைத்தார். உடன் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் இருந்தனர்.
நிகழ்வில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு வேலையை பணத்திற்காக செய்ய வேண்டாம், மன நிறைவோடு செய்ய வேண்டும், அப்போது தான் திருப்தி கிடைக்கும், பணம் மட்டுமே மகிழ்ச்சியை தரும் என்றால், உலகத்தில் பில்கேட்ஸ் மட்டும் தான் அதிக மகிச்சியாக இருப்பார்.
அனைவரும் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக செய்யுங்கள் என கூறினார். ஒரு காவலருக்கு 25000 ரூபாய் சம்பளம் என்று நினைக்ககூடாது, திருடு போன பொருட்களை மீட்டு கொடுக்கும் போது அவர்கள் தெரிவிக்கும் நன்றி மகிழ்ச்சியை தரும்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில் தமிழ்நாடு முழுவதும் 5 இடத்தில் நடத்து வருவதாகவும், 6000 பேர் பதிவு செய்திருப்பதாகவும் சென்னையில் இரண்டு நாட்கள் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் 100 கம்பெனிகள் வந்துள்ளதாகவும் தற்போது சென்னையில் மட்டும் 700 பேர் வந்திருப்பதாகவும் கூறினார்.
புத்தாண்டு கட்டுப்பாடுகள் குறித்து கேட்டதற்கு ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.