பவித் டி-20 கிரிக்கெட் போட்டி: ஆடவர் பிரிவில் குருநானக் கல்லூரி சாம்பியன்
பவித் டி-20 கிரிக்கெட் போட்டியில், ஆடவர் பிரிவில் குருநானக் கல்லூரியும் , மகளிர் பிரிவில் எத்திராஜ் கல்லூரியும் கோப்பையை வென்றன
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பவித் சிங் நய்யார் நினைவாக அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான டி-20 கிரிக்கெட் போட்டி 8வது ஆண்டாக நடைபெற்றது. ஆடவர், மகளிர்களுக்கென போட்டிகள் நடத்தப்பட்டது. மும்பை, கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு என ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் சென்னை முழுவதிலும் இருந்து 10 அணிகளும் கலந்து கொண்டு மோதியது.
இதில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஆடவர் பிரிவில் குருநானக் கல்லூரியும், விவேகானந்தா கல்லூரியும் மோதியது அதே போல் மகளிர் பிரிவில் குருநானக் கல்லூரியும் எத்திராஜ் கல்லூரியும் மோதியது.
முதலில் மகளிர் பிரிவில் குருநானக் கல்லூரி பேட் செய்தது ஆரம்பத்திலே தடுமாற்றத்தை சந்தித்த நிலையில் 38 ரன்களில் ஆட்டமிழந்தது, அடுத்து களமிறங்கிய எத்திராஜ் கல்லூரி 4 ஓவர்களில் இலக்கை அடைந்து விக்கெட் பறிகொடுக்காமல் வெற்றியை பதிவு செய்தனர்.
பின்னர் ஆடவர் பிரிவில் முதலில் பேட் செய்த குருநானக் கல்லூரி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது, அடுத்து களமிறங்கிய விவேகானந்தா கல்லூரி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். குருநானக் கல்லூரி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர்.
பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற டிஜிபி, ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உடன் குருநானக் கல்லூரியின் செயலாளர் மஞ்சித் சிங் நய்யார் ஆகியோர் இருந்தனர்.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், 50000 ரூபாய் பரிசுத் தொகையும், இரண்டாவதாக வந்த அணிக்கு கோப்பை மற்றும் 25000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பபட்டது.
ஆடவர் பிரிவில் தொடர் நாயகனாக குருநானக் கல்லூரியை சேர்ந்த அருணுக்கும், மகளிர் பிரிவில் தொடர் நாயகியாக எத்திராஜ் கல்லூரியை சேர்ந்த சுபஹரிணிக்கும் இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது