சென்னை அடையாறு கைக்கெடிகார கடையில் மோசடி செய்த போலி உதவி ஆய்வாளர் கைது
சென்னை அடையாறு கைக்கெடிகார கடையில் மோசடி செய்த போலி உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
கைது செய்யப்பட்ட போலி சப்- இன்ஸ்பெக்டர் சிவா.
சென்னை அடையாறு, எல்.பி., சாலையில், சத்யா டைம்ஸ் என்ற வாட்ச் கடை செயல்பட்டு வருகிறது.
இருதினங்களுக்குமுன்பு, போலீஸ் சீருடை அணிந்து, காவல் உதவியாளர் என அறிமுகம் செய்த நபர் வாட்ச் மாடல்களை பார்த்துள்ளார்.
பின்னர்,ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான, இரண்டு வாட்ச் வாங்கினார். கடை ஊழியர்கள், பணம் கேட்டதற்கு, அருகில் தான் வீடு உள்ளது பணம் எடுத்து வருகிறேன் என கூறி கடை ஊழியர் ஒருவரையும் உடன் அழைத்து சென்றார்.
இந்திராநகர் அருகே சென்றபோது, திடீரென அந்தநபர் ஓட்டம் பிடித்தார். இது குறித்து புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார், சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் வாட்ச்சுடன் ஓடியவர் வடபழனி, பகவான் காலனியை சேர்ந்த சிவா(40), எனபது தெரியவந்தது. இவரை கைது செய்த திருவான்மியூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவகுமார், ஜோஸ்வா என்ற பெயரில், உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து, பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் ரோந்து போலீசார் போல் வேடமணிந்து, பல மோசடிகளை செய்துள்ளார்.
இவர் மீது, வடபழனி, சங்கர்நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.