வேளச்சேரியில் தொடர் மழை : கார்களை மேம்பாலத்தில் நிறுத்திய பொதுமக்கள்

வேளச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கார்களை பொதுமக்கள் மேம்பாலத்தில் நிறுத்தினர்.;

Update: 2021-11-18 08:15 GMT
வேளச்சேரி மேம்பாலத்தில் நிற்கும் கார்கள்.

விட்டு விட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக வேளச்சேரி மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தின் மீது நிறுத்தியுள்ளனர்.
சென்னை வேளச்சேரி பழைய மேம்பாலத்தின் மீது வேளச்சேரி ராம்நகர் மக்கள் மற்றும் மழை நீர் தேங்கும் குடியிருப்பு வாசிகள் மழை நீரில் இருந்து தங்களது வாகனங்களை பாதுகாக்க மேம்பாலத்தின் மீது வரிசை கட்டி நிறுத்தியுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதே போல் வாகனங்களை நிறுத்தியிருந்தனர். பின்னர் மழை நீர் வடிந்த பிறகு அங்கிருந்து கார்கள் எடுக்கப்பட்டது. மீண்டும் பெய்து வரும் கனமழையின் காரணமாக கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் மழை நீர் முன்பு தேங்கிய பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க  தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். 

Tags:    

Similar News