சென்னையில் விரிவான இதயம், மூளை சிகிச்சை மையம் துவக்கம்

சென்னையில் விரிவான இதயம், மூளை சிகிச்சை மையம் துவக்கப்பட்டது.;

Update: 2022-10-29 02:15 GMT

மேம்பட்ட இதயம் மற்றும் மூளை ஆராய்ச்சி மையத்தை, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் தலைமையில், பிரபல சமையல் கலை நிபுணர் கே.தாமோதரன் (செஃப் தாமு) துவக்கி வைத்தார். 

சென்னையின் முதன்மையான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை (ஜி.ஜி.எச்.சி.) மேம்பட்ட விரிவான இதய மற்றும் மூளை சிகிச்சை மையத்தை  தொடங்கியுள்ளது.

மேம்பட்ட இதயம் மற்றும் மூளை ஆராய்ச்சி மையத்தை, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் தலைமையில், பிரபல சமையல் கலை நிபுணர் கே.தாமோதரன் (செஃப் தாமு) துவக்கி வைத்தார்.

மேம்பட்ட நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் தினேஷ் நாயக், இதய நோய் சிகிச்சை மருத்துவரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் பி.கோபு, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் வர்த்தக பிரிவு தலைவர் பாஸ்கர் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விரிவான இதயம் மற்றும் மூளை சிகிச்சை மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் உயர் தரமான சுகாதாரம் மற்றும் விரிவான சேவையை ஒரே குடையின் கீழ் வழங்குவது முதன்மையான குறிக்கோளாக உள்ளது. இதயம் மற்றும் மூளை பாதிப்பு குறைபாடுகளுக்கு சிறந்த மருத்துவக் குழு மூலம் அனைத்துவித சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

மேலும் நோய் குறைபாடுகளை கண்டறிந்து, சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. குளோபல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை நவீன மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை கொண்டுள்ளது. இத்துடன் வாரிய சான்றளிக்கப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நியூரோ இன்டர்வென்ஷனலிஸ்ட்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், இன்டர்வென்ஷனல் இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் முறையான விதிகளை பின்பற்றி இதயம் மற்றும் மூளை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை மையத்தில் * தமனியில் ரத்தக் குழாயில் ஏற்படும் ரத்த உறைவை நீக்கும் மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி எனும் அறுவை சிகிச்சை சிறந்த மருத்துவக் குழுவினரால் செய்யும் வசதியைக் கொண்டதாகும். எல்.வி.ஓ. எனப்படும் (லார்ஜ் வெஸல் அக்குலுசன்) மூளைக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய் பாதித்தலில் ஏற்படும் திடீர் பக்கவாதத்திற்கு மேற்கொள்ளப்படும் மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி அறுவை சிகிச்சை மூன்று மாதங்களில் உயிரிழப்பை 17 சதவீதம் குறைக்கிறது* .

இந்த மையம் தீவிர நரம்பியல் சிகிச்சை பிரிவையும், 24 மணி நேரமும் செயல்படும் தீவிர சிகிச்சை மருத்துவக் காப்பீடு வசதியைக் கொண்டுள்ளது.

கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மேம்பட்ட நரம்பியல் மற்றும் வலிப்பு நோய்க்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் தினேஷ் நாயக் மற்றும் இதய அறிவியல் மையத்தின் தலைவரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் பி.கோபு ஆகியோர் கூறுகையில், "இன்று சுகாதார துறையில் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ள சூழலில், பல சிறப்பு பிரிவுகளை கொண்ட மையத்தில் ஒருங்கிணைந்து நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது.

குளோபல் ஹெல்த் சிட்டியின் மேம்பட்ட இதயம் மற்றும் மூளை சிகிச்சை மையத்தில், இதயம் மற்றும் மூளை குறைபாடுகளுக்கு 24 மணி நேரமும் சிறந்த மருத்துவ வல்லுநர்களால் சிகிச்சையளிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்றனர்.

நியூரோ சயின்ஸ் மற்றும் முதுகு தண்டுவட குறைபாடு மையத்தின் நரம்பியல் நிபுணர் மூத்த ஆலோசகர் டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், இதயம் மற்றும் மூளை ஆராய்ச்சி மையத்தில் விரிவான ஒருங்கிணைந்த மருத்துவ வலையமைப்பு மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவைகளுக்கு உகந்த கால மேலாண்மையில் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல. மாறாக கிரிப்டேஜெனிக் பக்கவாதம் போன்ற வழக்கத்திற்கு மாறான ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக அமைந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News