வேளச்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
வேளச்சேரியில் குருநானக் கல்லூரி பகுதியில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை துபாய் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பினார். இன்று மதியம் அவர் வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மதியம் 12.30 மணிக்கு தொடங்கி ஒவ்வொரு தெரு பகுதியாக சென்று அவர் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
குருநானக் கல்லூரி 2-வது குறுக்கு தெரு பகுதியில் ரூ.3.81 கோடி செலவில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரி பிரதான சாலை- வேளச்சேரி புறவழிச்சாலை சிக்னல் முதல் வெஸ்டின் ஓட்டல் வரை ரூ.2.38 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.
இந்த பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.