விபத்து ஏற்படும் முன் விழிப்பார்களா? அதிகாரிகள் வேளச்சேரியில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள்

சென்னை வேளச்சேரி பகுதிகளில் கிழிந்த தொங்கும் பேனர்களால் மீண்டும் விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்று வாகனஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மாநகராட்சி மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-12 07:00 GMT

விபத்து ஏற்படும் முன் விழிப்பார்களா? அதிகாரிகள்

வேளச்சேரியில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள், 


சென்னை வேளச்சேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 100 அடி சாலை, விஜயநகர் பேருந்து நிலையம், வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள உயரமான கட்டிடங்களின் மீது இரும்பு கம்பிகளை கொண்டு சாரம் அமைத்து அதில் ராட்சத விளம்பர பேனர்களை வைத்து சமூக விரோதிகள் சிலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். இவர்கள் கோர்ட் அனுமதி பெற்றிருக்கிறார்கள் அதனால் வைத்து கொள்ள அனுமதிப்பதாக  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 கோர்ட்  பிறப்பித்த இடைக்கால தடை என்னவென்றுசம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும்  இதுபோல்  பேனர்கள் வைக்க  அனுமதி அளிப்பது ஏன் என பொதுமக்கள்  கேள்வி எழுப்புகின்றனர். 

வேளச்சேரியில் அடிக்கடி கிழிந்து தொங்கும் அனுமதியின்றி வைக்கப்பட்ட இராட்சத விளம்பர பேனரால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது.இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேளச்சேரி போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.சட்டவிரோத விளம்பர பேனர் வைத்து வரும் தனியார்  நிறுவன உரிமையாளர் ரம்யா கருணாகரன் என்ற நபரால் பல உயிர்கள் காவு வாங்கப்படும் அபாயம் உள்ளது. அவர் மீது புகார் அளித்தும் போலீசார் இதுவரை கைது செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.உடனடியாக கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வேண்டும் அவ்வாறு அகற்றாத பட்சத்தில் காற்றுக்கு அது கீழே சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால்  இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News