சென்னையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

சென்னையில் அரசு பஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-03-07 11:45 GMT

போதை ஆசாமியால் உடைக்கப்பட்ட அரசு பஸ் ஜன்னல் கண்ணாடி

சென்னை திருவான்மியூர் பணிமனையிலிருந்து சென்ட்ரலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஜெயந்தி சிக்னல் அருகே வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் பஸ்சில் ஏறியுள்ளார். மது போதையில் இருந்த அந்த நபரிடம் நடத்துனர் வடிவேலு டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார், அதற்கு டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி நடத்துனர் வடிவேலை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு எல்.பி சாலையில் இறங்கி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News