காதலியை கொலை செய்ய முயன்ற காதலன் : தற்கொலைக்கு முயற்சி
சென்னை அருகே காதலியை கொலை செய்ய முயன்ற காதலன் தற்கொலைக்கு முயன்றார். இருவரும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;
சம்பவம் நடந்த வீடு
காதலியின் வீடு புகுந்து, காதலன் காதலியை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை முயற்சி இருவரும் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை தரமணி, கானகம், கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர்கள் அருள்- விஜி, இவர்களது மகள் அர்ச்சனா(22), இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அஜித்(26), என்ற இளைஞரை காதலித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அஜித் குடி போதைக்கு அடிமையானவர் என்பதால் அர்ச்சனாவின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காதலன் சம்வத்தன்று காதலியின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறின் காரணமாக கத்தியால் காதலியின் கழுத்தில் குத்தியுள்ளார். மேலும் தாடையிலும் குத்தி கிழித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் தடுத்து நிறுத்தி போலீசாரை வரவழைத்தனர்.
அதற்குள் போலீசில் சிக்கிக் கொள்வோம் என எண்ணிய அஜித் காதலியின் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரையும் போலீசார் மீட்டு இருவரையும் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.
இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.சம்பவம் தொடர்பாக தரமணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.