பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

வேளச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை வெள்ள நிவாரணமாக 5000 ரூபாய் வழங்கக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-11-19 12:15 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் 

தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணமாக 5000 ரூபாய் வழங்க வலியுறுத்தி சென்னையில் பாஜகவினர் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், மாவட்ட பொருளாளர் ராஜ சிங்கம், சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் ராஜராஜன் ஆகியோர் கலந்துகொண்டார். அப்போது வெள்ள நிவாரணமாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டுமென கூறி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன்,  மத்திய அரசு ஐந்தாயிரம் கொடுத்தால் நாங்கள் கொடுப்போம் என்று மா.சுப்பிரமணியன் கூறியற்கு பதிலளித்த அவர், மராத்தான் ஓட்டம் போல் அங்கும் இங்கும் மா.சுப்பிரமணியன் ஓடி கொண்டிருக்கிறார். ஓரிடத்தில் உட்கார்ந்து தமிழக அரசின் கோப்புகளை அவர் ஒருமுறை படிக்க வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஏழு லட்சம் கோடி கொடுத்திருக்கிறது.

இலவச அரிசி, நூறு நாள் வேலை திட்டத்தில் 89 லட்சம் பேருக்கு சம்பளம், கிராம சாலை முதல் மெட்ரோ ரயில் வரை மத்திய அரசு வழங்கும் பணம் என்பது மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு தெரியும்.  ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்தரை கோடி தடுப்பூசி இறக்குமதி செய்வோம் என கூறினீர்கள், ஒன்று கூட உங்களால் பண்ண முடியவில்லை, ஆனால் பிரதமர் மோடி இதுவரை தமிழகத்திற்கு ஐந்தரை கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியிருக்கிறார்.தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் உதவிகளை மா.சுப்பிரமணியன் பார்க்க வேண்டும் என்று கூறினார்

வேளாண் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வேளாண் சட்டம் அருமையான சட்டம் என முன்னாள் முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்திலும் ஒரு சிலரே எதிர்ப்பு தெரிவித்தனர்.  தேர்தலுக்காக வேளாண் சட்டம் ரத்து செய்யப்படவில்லை என கூறினார். 

Tags:    

Similar News