சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி: தமிழக பாஜகவினர் கொண்டாட்டம்
சட்டசபைத் தேர்தல்களில் வெற்றியை அடுத்து, சென்னையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
இனிப்பு வழங்கிய பாஜகவினர்.
சென்னை திருவான்மியூரில் சென்னை கிழக்கு மாவட்டம், பாஜக இளைஞரணி சார்பில், மாவட்ட தலைவர் செல்ல பாண்டியன் தலைமையில் பாஜகவின் 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பாஜகவினர் கொண்டாடினர்.
அத்துடன் சாலையில் செல்வோர், கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்பு வழங்கி, பிரதமர் மோடிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என முழக்கமிட்டனர்.