அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலைய பணிகள் குறித்து விளக்கம்

சென்னை வேளச்சேரி காவல் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல் நிலைய பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2021-10-26 09:30 GMT

துப்பாக்கி பயன்படுத்துவது குறித்து மாணவிக்கு விளக்கம் அளிக்கும் காவல்துறை அதிகாரி

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் கிண்டி சரக உதவி ஆணையாளர் புகழ்வேந்தன் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அடையார் மாவட்ட காவல் துணை ஆணையாளர் மகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலையம் எப்படி செயல்படுகிறது, காவல் நிலையத்தை எப்படி அணுகுவது, காவல் நிலையத்தில் என்ன மாதிரியான உதவிகள் செய்கிறார்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொரோனா தொற்று வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை கைது செய்தால் நீதிமன்றத்திற்கு அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் விலங்கு,  காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கிகளை அதிகாரிகள் எப்படி உபயோகித்து வருகின்றனர் என்பது குறித்தும் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளச்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சண்முக சுந்தரம், குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர்கள்,காவலர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News