அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை : எம்பி கனிமொழி

அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை, அவர்களை காப்பாற்றி கொள்வதிலேயே அக்கறை காட்டிக் கொள்வதாக, எம்பி கனிமொழி தெரிவித்தார்.

Update: 2022-01-25 06:30 GMT

சென்னை தரமணியில் எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


சென்னை தரமணியில் ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் சென்னை போட்டோ பினாலே என்ற கண்காட்சியில் பல்வேறு புகைப்பட கலைஞர்களின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது, இந்தியாவில் அவர்களை ஈர்திருக்கிற விஷயத்தை புகைப்படமாகவும், கீழடி குறித்து மிக அழகான நம்முடைய வரலாறுகளையும், அதைத் தாண்டி அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை அவர்களை பற்றிய ஆவணங்கள் புகைப்பட கண்காட்சியாக காட்சிப் படுத்த பட்டிருந்தன.அது சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது. இக்கண்காட்சியானது டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனை பார்வையிட்ட திமுக எம்பி கனிமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில்:-
மத்திய அரசின் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிக்கும் மசோதா குறித்து கேட்டதற்கு, மாநில அரசின் உரிமைகள் பறிக்கும் எதையுமே நாம் ஏற்க முடியாது. தொடர்ந்து மத்திய அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் மாநில உரிமைகள் பறிக்கக்கூடிய செயல்களிலேயே ஈடுபடுகின்றனர் அது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.  பலபேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மாணவி உயிரிழப்பு குறித்து கேட்டதற்கு அமைச்சர் இது பற்றி தெளிவாக பதிலளித்துள்ளார். அதை படித்து பார்த்தாலே அவர்கள் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள் என தெளிவாக தெரியும். ஒரு மாணவி உயிரிழந்திருக்கிறார் மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. அதுமட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு அதை மத  அரசியலாக்குவது வருந்தத்தக்க ஒன்று.
இப்போது எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக அவர்களை காப்பாற்றி கொள்வதிலேயே அக்கறை காட்டி கொள்கிறார்கள் தவிர, அவர்கள் ஆளும் கட்சியாகவும் இருந்த போதும் செயல்படவில்லை, அதனால் எதிர்கட்சியாகவும் செயல்படவில்லை என்றார். ஆனால் பாஜக எதிர்கட்சியாக செயல்படுவதாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள்( ஊடகம்) வேண்டுமானால் அவர்களை  பற்றி பேசலாம் மக்கள் அவர்களை பற்றி கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News