வேளச்சேரியில் திமுகவினர் பணபட்டுவாடா அதிமுகவினர் குற்றச்சாட்டு
வேளச்சேரியில் திமுகவினர் பணம் விநியோகத்தை கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் போலீசார் தடுக்கவில்லை என அதிமுகவினர் புகார்;
வேளச்சேரியில் திமுகவினர் பணபட்டுவாடா செய்தபோது கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை வேளச்சேரி 176வது வார்டு திமுக வேட்பாளராக வே.ஆனந்தம் போட்டியிடுகிறார். இவரது ஆதரவாளர்கள் சசிநகர், ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குக்கு பணம் வழங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுகவினர் போலீசாருடன் நேரில் சென்று வாக்குக்கு பணம் கொடுக்கும் திமுகவினரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அதிமுகவினர் தேர்தல் பறக்கும் படையினரிடம் புகாரளித்தனர்.
திமுகவினர் வழங்கிய துண்டு பிரசுரம் மற்றும் வாக்குக்கு 1000 ரூபாயை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் அதிமுகவினர் ஒப்படைத்துள்ளனர். அதிமுக தரப்பில், திமுகவினர் பணம் கொடுப்பதை தெரிவித்து போலீசாருடன் சென்று, பிடித்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை அவர்களை பிடிக்கவும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் வெளியூரில் இருந்து திமுகவினர் ஆட்களை வரவழைத்து பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.