வேளச்சேரியில் கடை பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம், சாக்லேட் கொள்ளை: சி.சி.டி.வி வீடியோ வெளியீடு..!

CCTV Footage Video - வேளச்சேரியில் டீக்கடை பூட்டை உடைத்து 57 ஆயிரம் ரூபாய் பணம், சாக்லேட் கொள்ளை சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ வெளியாகியுள்ளது.

Update: 2022-06-10 06:15 GMT
வேளச்சேரியில் டீக்கடை பூட்டை உடைத்து பணம் மற்றும் சாக்லேட் திருடிய சம்பவ அதிர்ச்சி வீடியோ காட்சி.

CCTV Footage Video - சென்னை வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 3வது மெயின் ரோட்டில் முபாசிர் (26), என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. வழக்கம் [போல நேற்றிரவு கடையை பூட்டி விட்டு இன்று காலை 5 மணியளவில் கடையை திறப்பதற்காக உரிமையாளர் முபாசிர் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது கல்லாப் பெட்டியில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. உடனடியாக சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை 3 மணிக்கு ஆசாமிகள் சிலர் கடை பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே புகுந்தது தெரியவந்தது. பின்னர், கொள்ளையர் கல்லாப் பெட்டியில் இருந்து சுமார் 57ஆயிரம் ரூபாய் பணம், சாக்லேட், தர்பூசணி பழம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து முபாசிர் வேளச்சேரி காவல் நிலையத்தில் சி.சி.டி.வி காட்சிகளுன் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, கொள்ளையரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோல, வேளச்சேரி காவல் நிலைய  உட்பட்ட பகுதிகளில் கடையின் பூட்டு உடைத்து கொள்ளையடிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் பேட்டரி திருடுவது, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடுவது, பெட்ரோல் திருட்டு, வீட்டில் காப்பர் குழாய்கள், ஏ.சியில் உள்ள காப்பர் கம்பி திருடுவது என தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது எனவும்,  புகார் அளித்தால் வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் உட்பட யாரும் கண்டுகொள்வதில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 

புகாரின் மீது அக்கறை செலுத்தாமல் குற்றப்பிரிவு ஆய்வாளர் வேளச்சேரியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் தனது  நண்பர்களை அழைத்து சென்று தினந்தோறும் உணவு உண்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் எனவும்,காவல் நிலையத்தில் அவரது வாகனம் நிற்கிறதோ இல்லையோ அவரை சந்திக்க வேண்டும் என்றால் புகார் தாரர்கள் ஏதாவது உணவகத்தை அணுகினால் அவரை சந்திக்கலாம் என மனம் குமுறுகின்றனர், சக காவல்துறையினர்!

இந்த சூழலில், வேளச்சேரி மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற காவல்துறை உயரதிகாரிகள் மனம் வைத்தால் தான் விடிவு பிறக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News