சங்கேத வார்த்தை கூறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

கோட் வேர்டு பயன்படுத்தி புதையிலை பொருள்கள் விற்ற மூவரை பொறி வைத்து பிடித்த போலீசார், 130 கிலோ குட்கா, கார் பறிமுதல்;

Update: 2022-08-27 07:30 GMT

வீடுகளில் சுமார் 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்து  அடையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்

கோர்டு வோர்டு சொல்லி புகையிலை பொருட்கள் விற்பனை, பொறி வைத்து பிடித்த போலீசார் மூவர் கைது 130 கிலோ குட்கா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அடையார் சுற்று வட்டார பகுதிகளில் சிறு சிறு கடைகளுக்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விநியோகம் செய்ய வந்த போது கொடுங்கையூரை சேர்ந்த வரதராஜன்(38), என்பவரை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் அடையார் காந்திரோடு 4 வது பிராதான சாலையில் வைத்து காரில் குட்கா கடத்தி வந்த போது போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது காரை சோதனை செய்ததில் அதில் புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். காரில் இருந்த செல்லப்பா(53), சஞ்சய்(19), ஆகிய இருவரை கைது செய்தனர்.

விசாரணையில் செல்லப்பா பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி அங்கிருந்து காய்கறி வாகனத்தில் கடத்தி வந்து கொடுங்கையூரில் குடோனில் பதுக்கி வைத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்து வந்துள்ளார். மேலும் கோர்டு வோர்டு சொன்னால் தான் குட்கா சப்ளை செய்வார்களாம். ஹான்ஸ் வாங்க விரும்புவோர் மஞ்சள் வேண்டும் என்வும், மற்ற புகையிலை பொருட்களுக்கு சுண்ணாம்பு, கூல் லிப்பை, லிப் எனவும் சொன்னால் தான் சப்ளை செய்வதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.அவர்களது வீடுகளில் சோதனை செய்து சுமார் 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, மூவர் மீது வழக்குப்பதிவு செய்து அடையார் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News