100 கோடி மதிப்பில் ஊரகப் பகுதியில் நமக்கு நாமே திட்டம்:அரசாணை வெளியீடு
நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கிய நிலையில் மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
ரூ.100 கோடி மதிப்பில் ஊரகப் பகுதியில் நமக்கு நாமே திட்டம்:அரசாணை வெளியீடு
நமக்கு நாமே திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.50 கோடி ஒதுக்கிய நிலையில் தற்போது மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்த நிலையில் 2021 - 22ம் ஆண்டு நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஊரக உள்ளாட்சித்துறையானது அரசாணை வெளியிட்டது. திமுக ஆட்சி காலத்தில் 2011ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது.
மொத்தமுள்ள 100 கோடி ரூபாயில், 50 கோடியானது முதற்கட்டமாக இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்தது. மீதமுள்ள 50 கோடியானது பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பட்சத்தில் வெளியிப்பிடப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் "நமக்கு நாமே" செயல்படுத்துவதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.50 கோடி ஒதுக்கிய நிலையில் தற்போது மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.