சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மருத்துவமனையில் தீ விபத்து
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது;
instanews
logo
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கஸ்துர்பா மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீவபத்து மளமளவென பரவியது.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை விரைந்து அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அது குழந்தைகள் வார்டு என்பதால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை இயக்குநர் கண்மணி யிடம் பெசிய போது இது வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.தீ விபத்து ஏற்பட்ட சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளார்!
தீவிபத்து ஏற்பபட்ட மருத்துவமனையில் 2 குழந்தைகள் வென்டிலேட்டரில் உள்ளனர்.உயிரிழப்பு ஏதும் இல்லை தமிழக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.