அதிமுக உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு

அதிமுக உட்கட்சித் தேர்தல் நடந்த நிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

Update: 2022-04-27 16:45 GMT

அதிமுக உள்கட்சித்தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாவட்டச்செயலர்கள் பட்டியலை அறிவித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடிபழனிசாமி 

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் நடந்த நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான  அறிவிப்பை அ.தி.மு.க. கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்தியா, தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக எம்.கே.அசோக், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளராக சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக அருண்மொழிதேவன்.

சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக குமரகுரு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக பாலகிருஷ்ணா, தருமபுரி மாவட்டச் செயலாளராக கே.பி.அன்பழகன், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக ராமலிங்கம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக கருப்பணன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன்.

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட மாவட்டச் செயலாளராக உடுமலை ராதாகிருஷ்ணன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கரூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக வைத்தியலிங்கம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.பி.உதயக்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News