திருவொற்றியூர்: மனைவியை பிரிந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருவொற்றியூர் அருகே, திருமணமாகி ஒரு வருடத்திற்குள் மனைவியை பிரிந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-21 02:15 GMT

சென்னை திருவெற்றியூர் அடுத்த புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 32; தனது மாமா குணசேகரன் என்பவரின் வீட்டில், 10 வருடங்களாக தனது தாய் சுந்தரி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவி என்பவருடன் திருமணம் முடிந்து.  அதே வருடம் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தேவி பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபாகரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதை சகித்துக் கொள்ள முடியாத பிரபாகரன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News