தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

எர்ணாவூர் பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளம் கடக்கும்போது எதிரே வந்த ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2022-03-13 03:30 GMT

கார்த்திக்.

திருவெற்றியூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வ.19) தனது நண்பர்களுடன் தண்டவாளத்தை கடக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக வந்த ரயில் மோதி கார்த்திக் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடன் வந்த நண்பர்கள் கார்த்திகை மீட்டு திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கார்த்திக் உயிரிழந்து விட்டதாக விட்டதாக தெரிவித்தனர்.

 அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்து பட்டு பின்னர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக தண்டவாளங்களை கடக்கும் உயிரிழப்புகள் குறைந்து வந்த நிலையில், இளைஞர் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News