காசிமேட்டில் கத்தியை காட்டி வியாபாரிகளை மிரட்டிய வாலிபர் கைது
திருவொற்றியூர் காசிமேட்டில் கத்தியுடன் வியாபாரிகளை மிரட்டி அட்டகாசம் செய்த நபர் கைது.;
திருவொற்றியூர் அடுத்த காசிமேடு மீன் விற்பனை கூட பகுதியில் பட்டாக் கத்தியை வைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்
திருவொற்றியூர் அடுத்த காசிமேடு மீன் விற்பனை கூட பகுதியில் போதையில் இருந்த நபர் அப்பகுதியில் மீன்களை வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை திருடி கொண்டுவந்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை கத்தியை காட்டி பணம் மிரட்டி உள்ளார். முதலில் ஜூஸ் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டிய அவரிடமிருந்த கல்லாப் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அருகில் நின்று கொண்டிருந்த காரில் முன்புறம் கத்தியால் வெட்டி காரை ஓட்டி வந்தவரையும் மிரட்டி விட்டு அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
இதனால் பதட்டம் அடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்கு முன்பே பொதுமக்கள் மீனவர்கள் பலரும் ஒன்றாக சேர்ந்து கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த கத்தி மற்றும் கல்லாப்பெட்டியை வாங்கிக்கொண்டு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குகன் வயது 33 என்பதும் காசிமேடு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் இவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. பட்டாகத்தியுடன் காசிமேடு வியாபாரிகளை மிரட்டி அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.