மருத்துவக்கல்லூரியில் உலக செவிலியர் தினம்: மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி ஏற்பு
'கை விளக்கேந்திய காரிகை' எனப் போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்கப்பட்டது
உலக செவிலியர் தினத்தையொட்டி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
'கை விளக்கேந்திய காரிகை' எனப் போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் தினமாக சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக செவிலியர் தின சிறப்பு நிகழ்ச்சி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தலைமை வகித்தார். டிஜி வைஷ்ணவா கல்லூரி இயக்குனர் யு.அமலேஸ்வரி சிறப்புரையாற்றினார். பின்னர் செவிலியர்கள், மாணவிகள் உறுதிமொழி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து செவிலியர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜெனத் சுகந்தா, மருத்துக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.மகேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் பி.வனிதாமலர், செவிலிய கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, செவிலியர் கல்லூரி முதல் பிரேமா அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.