ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை போட்டி: வெண்கலம் வென்ற சிறுமி
ஐக்கிய அரபு நாட்டில் நடந்த உலகக் குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி வெண்கலம் வென்று சாதனை படைத்தார்
ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.
ஐக்கிய அரபு நாட்டில் உலக அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 56 நாடுகளில் இருந்து 400 வீரார்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவை சேர்ந்த 12 குத்து சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கலந்து கொண்டனர்.உலகளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த விருத்தி குமாரி என்ற பெண் ஒருவர் மடுமே வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து விமானம் மூலம் சென்னை வந்த தமிழக வீரர்,வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதையடுத்து குத்துச்சண்டை வீரர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் குத்துச்சண்டை போட்டிகளை அரசு ஊக்குவித்து,குத்துச் சண்டைப் பயிற்சி மையங்களை அமைத்து அதிகப்படியான வீரர்களை உருவாக்க வேண்டும்.. தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற உலக அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மற்ற நாடுகளில் இருந்து பங்கேற்ற வீரர்களுக்கு அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தியா சார்பில் சென்ற 12 வீரர்களும் தங்கள் சொந்த பணத்தில் செலவு செய்து சென்றுள்ளோம்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் உலகளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் அடித்து வெற்றி பெற்றுள்ளார்.இது மிகப்பெரிய பெருமைக்குரிய ஒன்று.அரசு மற்ற விளையாட்டுகளுக்கு உதவுவது போல் குத்துச்சண்டை விளையாட்டையும் ஊக்கப்படுத்தி வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் அதிகமான குத்து சண்டை வீரர்,வீராங்கனைகள் தமிழகத்தில் இருந்து உருவாகுவார்கள் இவ்வாறு கூறினர்.