ரயில் மோதி பெண் பலி

திருவொற்றியூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்த இளம் பெண் மீது ரயில் மோதி பலியானார்.

Update: 2023-01-16 02:15 GMT

ரயில் மோதி பலியான ஷாலினி (கோப்பு படம்)

திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியை சார்ந்த ஷாலினி (26) பட்டப்படிப்பு முடித்து ஆவடி பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார்

வழக்கம்போல் ஷாலினி ஆவடியில் வேலை முடித்துவிட்டு, ரயிலில் ஏறி திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ரயிலில் இருந்து இறங்கினார். செல்போனில் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதியது. இதில் ஷாலினி தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

ஷாலினி வீட்டுக்கு வராமல் நீண்ட நேரம் ஆனதால், குடும்பத்தினர் ஷாலினிக்கு போனில் தொடர்பு கொண்ட போது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஷாலினி நீண்ட நேரம் வராததால், ரயில் நிலையம் அருகே வந்து தேடிப் பார்த்தபோது அங்கு பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். பதறிய குடும்பத்தினர், ஷாலினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..

Similar News