ரூ.85 கோடி நிலக்கரியை காணோம்; அதிமுக மீது அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

அதிமுக அரசால் தான் அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் ரூ.85 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி மாயமாகி விட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பரப்பரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2021-08-20 17:40 GMT

அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசின் நடவடிக்கையால், 7 ஆண்டுகளுக்கு பிறகு, அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தின் முதல் அலகு, மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

முந்தைய அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக, வடசென்னை அனல்மின் நிலையத்தில் பதிவேட்டில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் நடப்பில் அவை இருப்பில் இல்லை.அதிமுக அரசின் தவறான நிர்வாகத்தின் காரணமாக மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Tags:    

Similar News