6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
மணலி புதுநகரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் . சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்;
வடசென்னையில் இயங்கி வரும் அனைத்து வகை லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மணலி புதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், எம்.எம். கோபி, மூர்த்தி, கரிகாலன் ஆகியோர் கூறியது:
சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய மூன்று துறைமுகங்கள், சி.பி.சி.எல்., மணலி உரத் தொழிற்சாலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கனரக தொழிற்சாலைகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள், டிப்பர் லாரிகள், மணல் லாரிகள், கனரக லாரிகள் இயக்கப் பட்டு வருகின்றன. தொடர்ந்து பல்வேறு காரணங் களால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
துறைமுகங்களில் நிலவும் தேக்க நிலையால் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துகிறோம் என்ற அடிப்படையில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் ஆன்லைன் முறையில் போக்கு வரத்து போலீஸார் பல்வேறு விதிமீறல்களைக் கூறி அபராதங் களை விதிக்கின்றனர்.
எதெற்கெடுத்தாலும் அபராதம் என்ற போக்கு இத்தொழிலை யே நடத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அபராதங்களை கடுமையாக்குவதற்கு முன்பு இத்தொழிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தி தரவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்ட 6 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
கோரிக்கைகள் என்ன?
எவ்வித விளக்கத்தையும் பெறாமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை உடனடியாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அபராதத் தொகைகளை ரத்து செய்ய வேண்டும். வடசென்னையில் போதுமான அளவில் வாகன நிறுத்த மையங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். லாரி ஓட்டுனர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்து விவாதிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும். லாரி ஓட்டுனர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
அண்மையில் உயர்த்தப்பட்ட 40 சதவீத காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம். எங்களது கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் மறுக்கப்பட்டால் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
உண்ணாவிரதப்போராட்டத்தையடுத்து லாரிகள் போக்கு வரத்து இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அசம்பாவி தங்களைத் தவிர்க்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.