மக்களை வரிவிதிப்புக்கு தயார்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது - ஜெயக்குமார்
மக்களை வரிவிதிப்புக்கு தயார்படுத்துவது போல் அமைச்சர் வெளியிட்ட அறிக்கை இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;
தமிழக அரசின் நிதி நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் திமுக மக்களை திசை திருப்புகின்றனர்.
வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம்.
வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர். மக்களை வரிவிதிப்புக்கு தயார்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது என்றார்.