புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-05-06 01:15 GMT

ஆட்டோ டிரைவரை தாக்கிய சம்பவத்தில் விசாரணை நடத்தும் போலீசார்.

புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக ஆட்டோவை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்த நபரை திடீரென வந்த கும்பல் கத்தியால் தாக்கி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் காயம்பட்ட நபர் பிரபு வயது 28 என்பதும் திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு அருகில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் பிரபுவை தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கத்தியால் வெட்டிய நபர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் திடீரென மர்ம கும்பல் கத்தியால் ஒருவரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News