திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

District Bar Association - திருவொற்றியூரில் ஒரே வளாகத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்கள் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள்தொழில் செய்து வருகின்றனர்;

Update: 2022-08-27 06:00 GMT

திருவொற்றியூர் வழக்கறிஞர்  சங்கத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வெங்கடேசன்

District Bar Association -சென்னை திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவொற்றியூரில் மூன்று நீதிமன்றங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன இந்த மூன்று நீதிமன்றங்கள் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் இங்கு தொழில் செய்து வருகின்றனர். திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தேர்தல் வழக்கறிஞர் தரணி தலைமையில் நடைபெற்றது. ஒரு வழக்கறிஞருக்கு ஒரு நீதிமன்றத்தில் மட்டும் வாக்கு என்ற அடிப்படையில் வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தலில் போட்டியிட்டவர்களில் தலைவராக வெங்கடேசன், செயலாளராக சக்திவேலன், பொருளாளராக குறளரசன், துணைத் தலைவராக செந்தில்குமார், இணைச் செயலாளர்களாக ரமேஷ், கலையரசி ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News