வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு படையினர்

பாதுகாப்பு படையினர் மூலம் 3 நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

Update: 2023-12-20 09:15 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில்  மீட்பு பணியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்புப்படையினர்

வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு படையினர் மூலம் 3 நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

சென்னை தென்மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்ப கடலோரக் காவல் படை மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியதில் இப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்யத் தொடங்கிய வரலாறு காணாத மழை செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு ராணுவம், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஹெலிகாப்டருடன் கூடிய கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பலான சுஜய் மன்னார் வளைகுடா பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில அரசிடமிருந்து முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட தையடுத்து மீட்பு பணிகளில் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியின் கடலோரப் பகுதிகளில் நிலைமையைக் கண்காணிக்கவும், கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றவும் ஹெலிகாப்டருடன் கூடிய கடலோரக் காவல் படையின் கடல் ரோந்துக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.

தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதை யடுத்து சென்னையிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அழைத்துச் சென்று மதுரை விமான நிலையத்தில் ஒரு டோர்னியர் ரோந்து விமானம், இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் 600 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.

ரயில் பயணிகள் மீட்பு:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் ராமநாதபுரத்தில் உள்ள கடற்படை நிலையமான பருந்துவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், உணவு மற்றும் மருந்து போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளில் ராணுவம், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறனர்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள கடலோர காவல்படையின் மாவட்ட தலைமையகம் மூலம் கடலோரக் காவல்படையின் 6 மீட்பு குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் ரயிலில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டன. கடற்படை சார்பில் இரண்டு குழுக்களாக செயல்பட்டு இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட வெள்ளத்திலிருந்து மீட்டுள்ளனர். சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட் டுள்ளன.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னிந்திய ராணுவப் பிரிவு வெள்ளம் வரவழைக் கப்பட்டு வெள்ளம் பாதித்துள்ள பகுதியில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வாசைபுரம், நாணல்காடு, ஸ்ரீவைகுண் டம் உள்ளிட்ட கிராமங்களி்ல் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 600-க்கும் மேற்பட்டோரை படகுகள் மூலம் மீட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கித்தவித்த சுமார் 2 ஆயிரம் குடும்பங்க ளுக்கு நிவாரண பொருள்களையும் கொண்டு சேர்த்தனர்.

ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளத் தில் சிக்கித் தவித்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட் டோரை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் தேவைப்படும் வரை தொடர்ந்து மீட்பு பணிகளில் பாதுகாப் புப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News