பெட்ரோல் விலை: சென்னையில் எஸ்டிபிஐ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சென்னையில் எஸ்டிபிஐ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-30 23:45 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ தொழிற்சங்கத்தினர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ தொழிற்சங்கம் சார்பில், சென்னையில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ தொழிற்சங்க ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய,  எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் சாந்து இப்ராஹிம், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்காமல், மாநில அரசை பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சொல்லி போராடுவது கேலிக்கூத்தானது என தெரிவித்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பி டி சாமுவேல், ஜீனத் அன்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News