கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை: போலீசார் விசாரணை

கேம் விளையாட செல்போன் தரவில்லை என்று தாயின் புடவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவன் போலீசார் விசாரணை.

Update: 2022-03-06 00:45 GMT

தண்டையார்பேட்டை கைலாச முதலி தெருவில் வசிக்கும் ராஜா என்பவர் அப்பகுதியில் மாட்டு வண்டி ஓட்டி லோடு கொண்டு செல்லும் தொழில் செய்து வருகிறார். அவருடைய 15 வயதான மகன் தினகரன் ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தினகரன் வீட்டிற்கு வந்தவுடன் தனது தாய் பானுப்பிரியாவின் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பானுப்பிரியா தனது மகனின் படிப்பில் ஆர்வம் குறைவதால் செல்போனில் கேம் விளையாடுவதை தடுத்ததாக கூறப்படுகிறது.

செல்போனில் கேம் விளையாடுவதால் படிப்பில் கவனம் செலுத்துவது குறைவது மட்டுமல்லாமல் கண்களுக்கு பாதிப்பதாக கூறி செல்போனை வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தினகரன் தனது தாய் வெளியில் சென்றவுடன் தனது தாயின் புடவையால் வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வந்த பானுப்பிரியா அக்கம்பக்கத்தினரிடம் கூறி தினகரனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் உயிரிழந்ததாக கூறிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News