புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொலை: 7 பேர் கைது

புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-20 03:30 GMT
கைது செய்யப்பட்ட 7 பேர் கொண்ட கும்பல்.

திருவொற்றியூர் அடுத்த புது வண்ணாரப்பேட்டையில் கடந்த 17 ம் தேதி இரவில் தியாகி பெருமாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரவுடி ஜீவன்குமாரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், 7 பேரை கைது செய்துள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இறந்த ஜீவன் குமார், பிரதீப் குமார் என்பவரை தாக்கிய குற்றத்திற்காக சிறைக்குச் சென்று திரும்பி வந்த நிலையில், மதுபான கடையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள சிலரிடம் வீண் வம்புக்கு செல்வது, தகராறு செய்வது என்ற நிலையில் ஜீவன் குமார் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மதுபான கடைக்கு சென்றுவிட்டு தனியாக நடந்து வந்து கொண்டிருந்த ஜீவன் குமாரை நோட்டமிட்ட 7 பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர்.

வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுவண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று கார்த்தி என்ற குள்ள கார்த்தி (26)நரேஷ் குமார் வயது (22) ஹரீஸ் (எ) விக்கி வயது 23, அஜய் (எ) ஜானகி ராமன் (23,) நஸ்ருல்லா வயது (23,) பெளசன் ( 21,) திவ்ய சந்தோஷ் (21) ஆகிய ஏழு பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News