எர்ணாவூர் பகுதியில் வழக்கறிஞர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல்
எர்ணாவூர் பகுதியில் வழக்கறிஞர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
எர்ணாவூர் நேதாஜி நகரில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் ஹரிஹரன், 36. திமுக மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே சிலர் கஞ்சா விற்பனை வீட்டின் அருகே நின்று கஞ்சா பிடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசாரிடம் பிடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள் ஹரிஹரன் காரில் வரும்போது எர்ணாவூர் நேதாஜி நகர் சந்திப்பு அருகே காரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியுள்ளார்.
இதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்தி கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஹரிகரன் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
படுகாயமடைந்த வழக்கறிஞர் ஹரிஹரன் கூறுகையில், தனது காரை வழிமறித்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்ததின் காரணமாக ராம்கி மற்றும் அவரை சார்ந்தவர்கள் காரை வழி மறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார் .
மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலின்போது திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு தான் முனைப்போடு வேலை செய்ததாகவும் அதே ஊரிலுள்ள அமமுக கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதற்காகவும் கஞ்சா விற்பவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த நபர்களும் அமமுக கட்சியை சார்ந்த நபரின் மகன்களும் ஒன்றாக சேர்ந்து இதுபோன்ற கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரின் உடைந்த கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர் கூறுகையில், கற்களால் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் பெட்ரோல் வெடிகுண்டு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் , தெரிவித்துள்ளதாகவும் இருப்பினும் ஆய்வு முடிவில் தெரியவரும் என்றும் காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை எண்ணூர் போலீசார் தேடி வருகின்றனர்