ஆர்.கே. நகர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

R.K. Nagar Government College Admission of students starts

Update: 2022-06-21 14:30 GMT

பைல் படம்

சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக இணையவழியில் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் முனைவர் க.சுடர்கொடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது இக்கல்லூரியில் சுமார் 1,900 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் , பி.காம் (சி.எஸ்), பி.எஸ்.சி (கணிணி அறிவியல்), பி.எஸ்.சி (கணிதம்), பி.ஏ.(தமிழ்), பி.ஏ.(ஆங்கிலம்), பி.பி.ஏ ஆகிய 6 பாட வகுப்புகள் ஆங்கில வழியிலும், பி.காம்.(பொது), பி.ஏ.(பொருளாதாரம்) ஆகிய பாட வகுப்புகள் ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலும் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் தலா 60 இடங்கள் ( பி.எஸ்.சி. (கணிணி அறிவியல் மட்டும் 50 இடங்கள்) என மொத்தம் 590 மாணவர்களை இந்த ஆண்டு சேர்த்திட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்படிப்புகளில் முதலாம் ஆண்டுக்கான விண்ணப்பம் ஜூன் 22 முதல் ஜூலை 7-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in அல்லது www.tngasa.org இணையத்தள முகவரிகள் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 50-ஐ நெட் பேங்கிங், வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்த இயலாதவர்கள் கல்லூரி மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் ஜூன் 22-ம் தேதிக்கு பிறகு எடுத்த வரைவோலை மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் சேலுத்தலாம். அரசு விதிமுறைகளின் படி இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படியில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுடர்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News