தமிழகத்தில் இன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, இ- பாஸ், இ-பதிவு இன்றி பயணிக்கலாம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கில் ஒரே மாதிரியான தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றது. ஓட்டல்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிடவும், இ- பாஸ், இ-பதிவு இன்றி பொதுமக்கள் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-05 06:09 GMT

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் பொதுமக்கள் (பைல் படம்)

தமிழகத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வருகின்றது.

அதன்படி, மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்ஸில் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% பேர் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் செல்வோர் இ-பதிவு இ- பாஸ் இன்றி பயணிக்கலாம்.

மேலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள், இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

உணவகங்கள், தங்கும் விடுதிகள், அடுமனைகள் மற்றும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை பொரத்தவரை பொறுத்தவரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News