திருவொற்றியூரில் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பரம பதவாசல் திறப்பு
திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு;
திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ராஜகோபும் அமைக்கும் பணிகள் நடைபெற்றதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மிகவும் பழைமையான கோயில் என்பதால் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம்தான் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியையொட்டி காவல் உதவி ஆணையர் சிதம்பர முருகேசன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
வைகுண்ட ஏகாதசி.. இதன் சிறப்பு என்ன? எப்படி விரதம் இருக்க வேண்டும்? சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி எப்போது, அதன் முக்கியத்துவம் என்ன, விரதம் இருக்கும் முறை, சொர்க்கவாசல் ஏன் திறக்கப் படுகிறது என்பத பார்க்கலாம்.இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வருவதுண்டு. ஏகாதசியில் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதாசியில் விருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த ஏகாதசி விரதம் 3 நாள் இருக்கக்கூடிய விரதமாகும். டிசமப்ர் 22-ம் தேதி, காலை 10 மணிக்கு தசமி திதியும், அதற்கு பிறகு ஏதாதசி திதியும் வளர்கிறது. டிசம்பர் 23-ம் தேதி காலை 6.27 வரை ஏகாதசி திதி உள்ளது.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசி திதியில் விரதம் தொடங்கி, துவாதசி திதியில் முடிக்க வேண்டும் என்பதுவிதி. எனவே வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் இன்றே விரதத்தை தொடங்க வேண்டும். இன்று பகல் பொழுது வரை உணவு உட்கொள்ளலாம். இரவு முடிந்தவர்கள் உபவாசமாகவும், முடியாதவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம்.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசாமி கோலிவலை கணக்கில் வைத்தே மற்ற கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி நாளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு என்ற நிகழ்வு அரங்கேறும். ஆனால் ஏன் அன்றைய சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு அவரின் அருள் பெற்ற மது, கைடபர் என்ற இரு அரக்க சகோதரர்களுக்கும் கூட பெருமாள் வைகுண்டத்தை திறந்து தன் உலகிற்கு அழைத்து சென்றார். அதை அனுபவித்த அரக்கர்கள், தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினர். மேலும் “ வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதரத்தில் வெளிவரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்பவர்களும் எத்தகைய பாவம் செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.
அவர்களின் வேண்டுகோளை பெருமாள் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. அன்றைய தினம் சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை